தேசிய வுட்பால் போட்டியில் செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்;

Update: 2025-04-08 09:07 GMT
மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.டி.எம். பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய அளவிலான வுட்பால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 24 மாநிலங்களில் இருந்து ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் சேலம் செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். சப்-ஜூனியர் இரட்டையர் பிரிவில் இந்த பள்ளியை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர்கள் லோஷித், சிபிசரண் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். சப்-ஜூனியர் குழு பிரிவில் 6-ம் வகுப்பு மாணவன் சம்ரித், 7-ம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், மிதுன், 8-ம் வகுப்பு மாணவன் மேகன் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பெற்றனர். சப்-ஜூனியர் தனிப்பிரிவில் 7-ம் வகுப்பு மாணவன் முகில் வெள்ளிப்பதக்கம் பெற்றார். இந்த போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவர்களையும், அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் பிரசாத் ஆகியோரை பள்ளி முதல்வர் மனோகரன் பாராட்டி வாழ்த்தினார்.

Similar News