ஆலங்குளம் அருகே கஞ்சா கடத்தல் வழக்கில் ஒருவர் கைது
கஞ்சா கடத்தல் வழக்கில் ஒருவர் கைது;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான அருள்ராஜ் என்கிற கோழி அருள் (52) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதில் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 2 கொலை வழக்குகள் உள்பட 40க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய இவர் இன்று காலையில் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கோட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.