அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் பலி.
மதுரை திருமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்துள்ளார்.;
மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடி வெள்ளாங்குளம் பிட் 2 பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி அருண்குமார் என்பவர் அவருக்கு கிடைத்த தகவலின் பெயரில் திருமங்கலம் விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிக்குடி பெட்ரோல் பங்க் அருகே நேற்று (ஏப்.7) மாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக அறிந்து அங்கு சென்று பார்த்த பின்பு கள்ளிக்குடி காவல் நிலையத்திற்கு இது குறித்து புகார் அளித்தார். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? மோதிய வாகனம் எது? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.