தகட்டூர் மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் கோயில் பங்குனி மாத திருவிழா

பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் வினோத திருவிழா;

Update: 2025-04-08 11:59 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தகட்டூர் மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் கோவில் பங்குனி மாத திருவிழா நடைபெற்றது. கோவிலின் முக்கிய திருவிழாவான, வாழைப்பழத்தை பக்தர்கள் மீது வீசும் வினோத திருவிழா நடைபெற்றது. முன்னதாக, தகட்டூர் பைரவநாத சுவாமி ஆலயத்திலிருந்து கப்பரை எடுத்து வரப்பட்டது. கோவிலை வலம் வந்து பின்னர் பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்கள் மீது வீசப்பட்ட வாழைப்பழங்களை பிடித்து எடுத்து சென்றனர். வாழைப்பழத்தை உண்டால், குழந்தை பாக்கியம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்கள் நேர்த்தி கடனை நிவர்த்தி செய்ய உருவபொம்மைகளை வாங்கி வைத்து விளக்கேற்றி வழிபட்டனர். பின்னர், குதிரை எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Similar News