கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருச்செங்கோடு வருடாந்திர விளையாட்டு தினம்
கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருச்செங்கோடு வருடாந்திர விளையாட்டு தினம்;
கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருடாந்திர விளையாட்டு தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வானது கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.ஆர்.சீனிவாசன், துணை தாளாளர் திரு.கே.எஸ்.சச்சின் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் மா கார்த்திகேயன் அவர்களின் வாழ்த்துகளோடு தொடங்கப்பட்டது. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் வே.மகாலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். வணிகவியல் துறையைச் சார்ந்த மாணவி வி.நிஷா வரவேற்புரை வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் முனைவர் எம். நிர்மலா ஆண்டறிக்கை வாசித்தார். திருமதி. எஸ் கோகிலா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர், நாமக்கல் மாவட்டம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு என்பது பொழுதுபோக்கல்ல, அது உடலுக்கும், மனதுக்கும் பல நன்மைகளைத் தருகிறது. மேலும் ஒழுக்கம், குழுப்பணி, தலைமைத்துவம் போன்ற திறமைகளை வளரப்பது மட்டுமின்றி, நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். மேலும் வெற்றிப்பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களும், கோப்பைகளையும் வழங்கினார். இரண்டாமாண்டு வணிகவியல் துறையைச் சார்ந்த எஸ். பூமிகா தனிநபர் சாம்பியன்ஷிப் கோப்பையையும், இரண்டாமாண்டு மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையையும் வென்றனர். இறுதியாக வணிகவியல் பயன்பாட்டியல் துறை மாணவி எஸ்.பவித்ரா நன்றியுரை வழங்கினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் முனைவர் எம் நிர்மலா மற்றும் உதவி உடற்கல்வி இயக்குநர் எஸ் கார்த்திகா ஆகியோர் செய்தனர். இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.