மர்மமான முறையில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி மரணம்

மதுரை அருகே மர்மமான முறையில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி உயிரிந்த சம்பவம் நடந்துள்ளது.;

Update: 2025-04-08 13:05 GMT
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் துரைசிங்கம் என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மனைவி இறந்ததால் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று ( ஏப்.8) அப்பகுதியில் உள்ள மக்கள் இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வீட்டை திறந்து பார்த்த போது அழுகியநிலையில் இருந்த அவரது உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News