காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திமுக சேர்மனை கண்டித்து ஒன்றிய செயலாளர் தலைமையில் செயல் அலுவலரிடம் மனு அளித்த அதிமுகவினர்*
காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திமுக சேர்மனை கண்டித்து ஒன்றிய செயலாளர் தலைமையில் செயல் அலுவலரிடம் மனு அளித்த அதிமுகவினர்*;

காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திமுக சேர்மனை கண்டித்து ஒன்றிய செயலாளர் தலைமையில் செயல் அலுவலரிடம் மனு அளித்த அதிமுகவினர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா எம்.பி நிதியில் இருந்து கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில் பேருந்து நிலையம் வரும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், வெயில் காலத்தில் தங்குவதற்கு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திமுக சேர்மன் R.K.செந்தில் தலைமையில் நடைபெற்ற காரியாபட்டி பேரூராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட இந்த பயணிகள் நிழற்குடையில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக தவறான தகவல்களை கூறி மன்ற தீர்மானம் மூலம் பயணியர் நிழற்குடையை இடிப்பதற்கு மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது என அதிமுகவினர் புகார் தெரிவித்தனர். மேலும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அனைத்து அரசு கட்டிடங்களில் உள்ள அதிமுக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பெயரை இருட்டடிப்பு செய்யும் வகையில் விடியா திமுக அரசின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வின் உத்தரவுபடி காரியாபட்டி திமுக சேர்மன் உள்ளிட்ட விடியா திமுக அரசின் அதிகாரிகள் மற்றும் ஏவல் துறையினர் செயல்பட்டு வருவதாக காரியாபட்டி ஒன்றிய அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் விடியா திமுக அரசின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் காரியாபட்டி பேரூராட்சி திமுக சேர்மன் செந்தில் ஆகியோரை கண்டித்து காரியாபட்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தோப்பூர் முருகன் மற்றும் நகரச் செயலாளர் விஜயன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் காரியாபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் முருகனிடம் பயணிகள் நிழற்குடைய இடிக்க கூடாது என்று வலியுறுத்தி அதிமுகவினர் மனு அளித்தனர். மேலும் விடியா திமுக சேர்மனுக்கு ஆதரவாக பொதுமக்களின் எதிர்ப்பை மீறி பயணியர் நிழற்குடையை இடிப்பதற்கு பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மாவட்ட கழகச் செயலாளர் தலைமையில் பொதுமக்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் அதிமுக சார்பில் நடைபெறும் எனவும் அதிமுகவினர் தெரிவித்தனர்.