மழையால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவேரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர் க
மழையால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவேரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்*;

திருச்சுழி அருகே நரிக்குடி விவசாய அலுவலகம் முன்பு பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவேரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நரிக்குடி விவசாய அலுவலகம் முன்பு கடந்த 2024 ம் ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு தற்போது வரை உரிய நிவாரணம் வழங்கப்படாத நிலையில் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், நரிக்குடி பகுதியில் காப்பீடு செய்த நெல் விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் மேலும் வைகை நதியின் துணை ஆறான கிருதுமால் நதியின் 46 பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் கிடைத்திட தமிழக அரசின் கிருதுமால் நதி ஆயக்கட்டு நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவேரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவேரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் விருதுநகர் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நரிக்குடி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். பேட்டி : அர்ச்சுனன் (மாநில பொது செயலாளர் - காவேரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு)