மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே கடை பூட்டை உடைத்து ரொக்கம் திருட்டு
மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே காபி கடையின் பூட்டை உடைத்து ரூ.65,000 ரொக்கம் திருட்டு:- கைரேகை நிபுணர்கள் சோதனை மேற்கொண்டதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை போலீஸார் தீவிர விசாரணை;
:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் பின்புறம் டவுன் எக்ஸ்டென்ஷன் சாலையில் தேனீரகம் (கும்பகோணம் ஐங்கரன் காபி) உள்ளது. இங்கே நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து ஷட்டரை திறந்து மர்ம நபர் ஒருவர் உள்ளே சென்று கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.65,000 ரொக்கப்பணத்தை திருடி சென்றுள்ளார். புகாரின் பேரில் அங்கு வந்த மயிலாடுதுறை போலீசார் கடையில் சோதனை செய்து விசாரணை செய்தனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. பேருந்து நிலையம் அருகிலேயே நடைபெற்ற திருட்டுச் சம்பவம் வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு குற்ற சம்பவங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.