கோயில் இடங்களில் குத்தகைதாரர் உரிமை பறிபோவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கோயில் நிலங்களில் குத்தகைதாரர்களது உரிமையைமீட்ககோரி குத்தகை விவசாய சங்கத்தினர் போராட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ் விவசாயிகள் உண்ணா விரத போராட்டம்;
தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் தலைமையில் 200க்கும் மேற்பட்டவிவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். குத்தகை விவசாயிகளுக்கநிபந்தனையின்றி அடையாள அட்டை உடன் வழங்கிடவேண்டும், கோவில், அறக்கட்டளைகள், ஆதீனங்களுக்கு சொந்தமான குத்தகை விவசாயிகளின் விளை நிலங்கள் விற்பனை செய்வதை கொள்கை முடிவு எடுத்து தடுத்து நிறுத்திடவேண்டும்.. வாரிசுதாரர்களுக்கு குத்தகை பதிவை பெயர் மாற்றம் செய்து வழங்கிடவேண்டும் குத்தகை பாக்கியை காரணம் காட்டி விவசாயிகளை நில அபகரிப்பாளர்கள் எனக்கூறி விளைநிலங்களை விட்டு வெளியேற்றுவதையும், கோவில் சொத்துக்கள் என ஏலம் விடுவதற்கான நீதிமன்ற உத்தரவை தனக்கு சாதகமாக பயன்படுத்தி விவசாயிகளின் விளைநிலங்களை ஏலம் விட எடுக்கும் முயற்சியை தடுத்து நிறுத்திடவேண்டும் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள், அறக்கட்டளைகளுக்கு சொந்தமான சொத்துக்களை அறநிலையத்துறை கண்காணிப்பில் கொண்டு வந்திடவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். வருவாய்த்துறை, ஆதீனங்கள் உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள்,குத்தகை விவசாயிகள் கொண்ட முத்தரப்பு கூட்டம் நடத்தி குத்தகை தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.