தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் குட்டு திமுக வேட்டு

தமிழக ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று மயிலாடுதுறையில் திமுகவினர் வேட்டு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்;

Update: 2025-04-08 19:33 GMT
  • whatsapp icon
:- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்றும் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது, மாநில அரசின் ஆலோசனைபடியே செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மசோதாக்கள் மாற்றப்பட்டிருந்தால் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும் என்றும், பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதம் என தமிழக அரசு தொடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று மயிலாடுதுறையில் திமுகவினர் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை திமுக அலுவலகமான பகுத்தறிவு மன்றத்தில் இருந்து கட்சி கொடியுடன் ஊர்வலமாக பேருந்து நிலையம் பகுதிக்கு திமுக நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் சென்ற திமுகவினர் அங்கு பட்டாசு வெடித்து, பொதுமக்கள், பாதசாரிகள், வாகனஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று முழக்கங்களை எழுப்பினர்.

Similar News