ஓய்வூதியர்களுக்கு எதிராக நடக்காது மத்திய அரசை கண்டித்து போராட்டம்
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறையில் மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்க பேரமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்;
:- உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறையில் மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்க பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சுந்தரம், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் தமிழரசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ரயில்வே ஓய்வூதியர் சங்கம், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம், அஞ்சல் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.