தென்காசி அருகே பத்ரகாளியம்மன் கோவிலில் கடைசி சிறப்பு பூஜை நடைபெற்றது

பத்ரகாளியம்மன் கோவிலில் கடைசி சிறப்பு பூஜை நடைபெற்றது;

Update: 2025-04-09 01:32 GMT
தென்காசி அருகே பத்ரகாளியம்மன் கோவிலில் கடைசி சிறப்பு பூஜை நடைபெற்றது
  • whatsapp icon
தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து ராமநதி அணைக்கு செல்லும் வழியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தமிழ் மாதம் தோறும் கடைசி செவ்வாய் அன்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இதை தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News