
சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலை, பாச்சேரியில் கஸ்துார்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி ஆண்டு விழா நடந்தது. நிர்வாகி இதாயத்துல்லா தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் கணேசன், குப்புசாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சந்திரலேகா முன்னிலை வகித்தனர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊராட்சி தலைவர் துரைசாமி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் வினோதினி, ஜெயலட்சுமி, ஆசிரியர்கள் தேசியமணி, கண்ணம்மா,சலத்மேரி,பத்மஸ்ரீ, ஜெயந்தி,செல்வி,சீத்தாலட்சுமி பங்கேற்றனர். ஆசிரியர் இளவரசி நன்றி கூறினார்.