
சங்கராபுரம், வள்ளலார் மன்றத்தில் பங்குனி மாத பூச விழா நடந்தது. மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். மன்ற செயலாளர் ராதாகிருஷ்ணன், இன்னர்வீல் கிளப் முன்னாள் தலைவர் கலாவதி, அரிமா மாவட்ட தலைவர் வேலு, ஆசிரியர் வேதநாயகி முன்னிலை வகித்தனர். ரோட்டரி டிரஸ்ட் சேர்மன் ஜெனார்தனன் வரவேற்றார். முன்னதாக, புதுபாலப்பட்டு அரசு உயர்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், ஆசிரியர் இளையாப்பிள்ளை முன்னிலையில் அகவல் படித்து பிரார்த்தனை செய்யப்பட்டது. சிறப்பு ஜோதி தரிசனத்திற்கு பின் பிரசாதம் வினியோகிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் சீனுவாசன், மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.