
திருக்கோவிலுார் மற்றும் மணம்பூண்டியில், தமிழக கவர்னருக்கு எதிரான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தி.மு.க.,வினர் கொண்டாடினர். தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களை கவர்னர் கிடப்பில் போட்டதற்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று கவர்னருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. இதை வரவேற்று திருக்கோவிலுாரில், சேர்மன் முருகன் தலைமையில், ஒன்றிய நகர தி.மு.க., சார்பில் ஐந்து முனை சந்திப்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தங்கம், நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர அவை தலைவர் குணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல மணம்பூண்டியில் முகையூர் ஒன்றிய தி.மு.க., சார்பில் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஒன்றிய குழு சேர்மன் தனலட்சுமி, தெற்கு ஒன்றிய செயலாளர் லுாயிஸ், அரகண்டநல்லுார் பேரூராட்சி சேர்மன் அன்பு, மாவட்ட துணை செயலாளர் இளந்திரையன், ஒன்றிய குழு துணை சேர்மன் மணிவண்ணன், அவைத்தலைவர் சக்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.