திருச்செங்கோட்டில் ஒட்டுமொத்த தூய்மை பணி துவக்கம்
திருச்செங்கோட்டில் ஒட்டுமொத்த தூய்மை பணி துவக்கம்;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரின் மையப்பகுதியில் அம்மன் குளம் அமைந்துள்ளது. இந்த அம்மன் குளத்தை சுற்றி நடைபயிற்சிமேற்கொள்ளும் வகையில் நடைமேடை அமைக்கப் பட்டுள்ளது. இந்த நடை பயிற்சி பாதையை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். காலையிலும் மாலையிலும் நடைபயிற்சி செய்கிறார்கள். இந்த நடைமேடையில் புல் பூண்டு முளைத்துள்ளதாக நகராட்சி நிர்வாகத்திற்கு வந்த தகவலை தொடர்ந்து இன்று அம்மன் குளம் நடைமேடை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. நகராட்சியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் அனைவரும் இந்த பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு மற்றும் திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் அருள் ஆகியோர் இந்த துப்புரவு பணிகளை ஆய்வு செய்தனர். திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு காண தானும் துப்புரவு கருவிகளைக் கொண்டு நடை பாதையை சுத்தம் செய்தார். சுமார் 3 1/2 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த பாதையை இன்று முழுவதும் நகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்ய உள்ளனர். திருச்செங்கோடு நகர மன்ற தலைவரிடம் நடைபாதையின் ஒரு பகுதி வேலி சேதமடைந்துள்ளதாகவும் அதனைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக நடைபாதையில் பலர் அமர்ந்து நடை பயிற்சி செய்பவர்களுக்கு இடையூறு விளைவிப்பதாக இந்த பகுதி வாசிகள் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து சேதமடைந்த வேலியை சீர் செய்யவும் அந்த பகுதியில் இரவு காவலர்கள் அமர்த்தவும் நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு உத்தரவிட்டார்.