சேலம் கலெக்டர் அலுவலகத்தில்

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்;

Update: 2025-04-09 08:35 GMT
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அருள்பிரகாஷ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் முருகபூபதி, பொருளாளர் அகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News