
சங்கராபுரம் அடுத்த கொளத்தூர் முருகன் கோவில் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் பெரிய கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்த கருத்த உடையார் மகன் ரமேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எதிரே மோதிய சித்தாத்தூர் மதன்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து சங்கராபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.