மக்கள் குறை தீர்வு கூட்டம்

கூட்டம்;

Update: 2025-04-09 09:37 GMT
மக்கள் குறை தீர்வு கூட்டம்
  • whatsapp icon
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத மனுதாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, தலைமையில் ஒவ்வொரு வார புதன்கிழமையும் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று 09.04.2025-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது, பொதுமக்கள் காவல்நிலையங்களில் அளித்த புகார் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத 40 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தசரவணன், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் மனுதாரர்கள் பலர் பங்கேற்றனர்.

Similar News