கிளைகள்தோறும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த
அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்;
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வாழ்குடி, காரையூர் ஆகிய 2 ஊராட்சிகளில், ராராந்திரிமங்கலம், வாழ்குடி, விற்குடி, காரையூர், திருப்பயத்தங்குடி, பில்லாலி, கீழதஞ்சாவூர் ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட அதிமுக 8 பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கட்சியின் அமைப்பு செயலாளர் ஆசைமணி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் பாபு முருகவேல் கலந்துக் கொண்டு பேசினார். கூட்டத்தில், கட்சியில் இளைஞர்களை அதிக அளவில் இணைப்பது, கிளைகள் தோறும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது, 2026 சட்டமன்ற தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற செய்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், கீழையூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வேதையன், மாவட்ட பிரதிநிதிகள் விநாயகர் சுந்தரம், கார்த்திகேயன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.