மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
மாநில மற்றும் மாவட்ட அளவில் 2024-2025-ஆம் ஆண்டிற்கு மணிமேகலை விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது;

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தருமபுரி மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்புற பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் சமுதாய அமைப்புகளான சுயஉதவிக்குழுக்கள் (ஊரகம் / நகர்புரம்), கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவை தேர்வு செய்யப்பட்டு ஆண்டு தோறும் மாநில மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து 2024-2025-ஆம் ஆண்டிற்கான மாநில மற்றும் மாவட்ட அளவிலான மணிமேகலை விருதுகள் வழங்குவதற்கு சுயஉதவிக்குழுக்கள் (ஊரகம் / நகர்புரம்), கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய அமைப்புகளிடமிருந்து உரிய வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி ஆவணங்களுடன் கருத்துருக்களை வட்டார இயக்க மேலாண்மை அலகு, அனைத்து வட்டாரங்கள் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி என்ற முகவரியில் 30.04.2025-ஆம் தேதிக்குள் நேரில் சமர்ப்பித்திட தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ்,இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.