கருப்பூர் அருகே சேலம்- பெங்களூரு சாலையோரம் கிடந்த குப்பை குவியலுக்கு மர்மநபர்கள் தீ வைத்தனர்.

தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.;

Update: 2025-04-10 03:11 GMT
சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கருப்பூர் ெரயில்வே மேம்பாலத்தின் சாலை ஓரத்தில் மூட்டை மூட்டையாக கொட்டி கிடந்த கோழி இறைச்சி கழிவுகள், குப்பைகளை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் சாலை ஓரத்தில் இருந்த மரங்கள், செடிகள் கொழுந்து விட்டு எரிந்தன. இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. மேலும் அந்த பகுதியில் சமையல் கியாஸ் நிரப்பும் தொழிற்சாலை உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த கருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஓமலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதன்பிறகே அந்த பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Similar News