குமரி அனந்தன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி
மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்;
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் குமரி அனந்தன் மரணம் அடைந்தார். இதையடுத்து சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி அனந்தன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி பொருளாளர் ராஜகணபதி தலைமை தாங்கி குமரி அனந்தன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிசார் அகமது, பொதுக்குழு உறுப்பினர் பிரபு உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.