சமரச வார விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி
நீதிபதிகள் வக்கீல்கள் கலந்து கொண்டனர்;
சமரச வார விழாவையொட்டி, சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் நீதிபதிகள், வழக்குரைஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் சமரச தீர்வு மையம் சார்பில் வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி சமரச வார விழா விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தொடங்கி வைத்தார். பேரணியில் நீதிபதிகள், வழக்குரைஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சமரசம் மையம் மூலம் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு பேரணி சென்றனர். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி, சுற்றுலா மாளிகை , அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக சென்று மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் நிறைவடைந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் சேலம் மாவட்டம் முழுவதும் 700 மேற்பட்ட வழக்குகள் சமரச நீதிமன்ற மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.