இறைச்சிக் கடைக்காரர் கழுத்தை நெரித்து கொலை காவலர்கள் விசாரணை
இறைச்சிக் கடைக்காரர் கழுத்தை நெரித்து கொலை பாலக்கோடு காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை;
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏர்ரனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமார் இவர் பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே கோழி இறைச்சி கடை நடத்தி வருகின்றார் இவர் முதல் மனைவியை பிரிந்து இரண்டாவதாக கோவிந்தம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் இறைச்சிக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுடன் இவரது இரண்டாவது மனைவி கோவிந்தம்மாள் பழகியதாக கூறப்படுகிறது இதனால் சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு கோழி கடைக்கு சென்ற குமார் அங்கேயே உறங்கியுள்ளார் இன்று அதிகாலை அப்பகுதியாக கோழி கடைக்கு சென்றபோது குமார் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து குடும்பத்தினர் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் குமாரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.