சோ்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சோ்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழைய கட்டடத்தில் தேவையற்ற பொருள்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அந்த அறையில் உள்ள பொருள்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன. இதைப் பாா்த்த மருத்துவமனை ஊழியா்கள் அளித்த தகவலின்பேரில், சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலா் பாலச்சந்தா் தலைமையிலான வீரா்கள் ரவிந்திரன், நான் முகராஜன், சமுத்திரபாண்டி, மாடசாமி ஆகியோா் வந்து சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். எனினும், அந்த அறையில் இருந்த பழைய பொருள்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இதுகுறித்து சோ்ந்தமரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.