கும்பாபிஷேகத்தில் இஸ்லாமியர்களுக்கு மரியாதை
மயிலாடுதுறை அருகே மகா காளியின் ஆலய கும்பாபிஷேகத்தில் இஸ்லாமியர்களுக்கு மரியாதை;
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூர் கிராமத்தில் பழமை வாய்ந்த மஹா காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.இதற்காக நான்கு கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக் கோவில் அமைந்துள்ள பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக நீடூர் மற்றும் நெய்வாசல் பகுதி பள்ளிவாசல் முத்தவல்லி, ஜமாத்தார்கள், நாட்டாமைகள்,மற்றும் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட இஸ்லாமியர்களை மேளதாளம் முழங்க மஹா காளியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்த கிராம மக்கள் அவர்களுக்கு இனிப்புகள் மற்றும் சிற்றுண்டி வழங்கி தங்களது அன்பை பகிர்ந்து கொண்டனர். கிராம கோவிலில் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக நடைபெற்ற சம்பவம் சுற்று வட்டார பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.