காவல் ஆய்வாளர் சார்புத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

காவல் ஆய்வாளர் சார்புத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.;

Update: 2025-04-10 14:14 GMT
காவல் ஆய்வாளர் சார்புத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
  • whatsapp icon
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-I மற்றும் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் சார்புத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. பெரும்பாலான அரசுப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம், ரயில்வே, வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம், இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் போன்ற தேர்வாணையங்களின் போட்டித் தேர்வுகள் வாயிலாக மாநில மற்றும் ஒன்றிய அரசின் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இது போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக நடத்தப்படுகின்றன. விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் போட்டித் தேர்விற்கான பயிற்சி கையேடுகள், பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சிறிய அளவிலான மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றது. மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியால் போட்டித்தேர்வுக்கு பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், வேலைவாய்ப்பை பெற்று தரும் உயர்ந்த நோக்கத்திலும், பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-I மற்றும் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் சார்புத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு ஒருநாள் கருத்தரங்கு இன்று விருதுநகர் மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் தொடர்புடைய தேர்வுகளில் வெற்றி பெற்று தற்போது அரசு பணிகளில் உள்ள அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த சிறந்த நிபுணர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. அதன்படி இந்நிகழ்வில் TNUSRB SI தேர்வர்களுக்கு காலை 9.30 மணியிலிருந்து மதியம் 1.30 மணி வரையும் மற்றும் TNPSC GROUP - 1 தேர்வர்களுக்கு மதியம் 1.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரையும் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இத்தேர்வுகள் குறித்து விளக்கங்கள் மற்றும் தெளிவுரை வழங்கப்பட்டது. இக்கருத்தரங்கில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் காவல் ஆய்வாளர் சார்புத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள 75 தேர்வர்களும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-I தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள 78 தேர்வர்களுக்கு கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சி மூலம் பயன்பெற்றவர்கள் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் கிடைத்ததாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு தெளிவான விடை கிடைத்ததாகவும், இது போன்று போட்டித்தேர்வுகளுக்கு தேர்ச்சி பெற ஏதுவாக எண்ணற்ற வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் தமிழ்நாடு அரசுக்கும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட நிர்வாகத்திற்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

Similar News