மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனத்தை அமைச்சர் வழங்கினார்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.90.10 இலட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்களை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார். ---;

Update: 2025-04-10 14:16 GMT
விருதுநகர் மாவட்டம், சிவகாசி சி.எஸ்.ஐ. மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் ) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், 85 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,06,000/- வீதம் மொத்தம் ரூ.90.10 இலட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்களையும், 84 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை என மொத்தம் 169 பயனாளிகளுக்கு ரூ.90.10 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் செயல்படும் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக அறிவிக்கும் திட்டங்களின் மூலம் அவர்களது வாழ்வில் புது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையையும், சமூக பாதுகாப்பையும் பெற்று வாழ்ந்து வருகிறார்கள். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு தனியாக துறையை உருவாக்கி, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு தனியாக துறையை உருவாக்கி, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை, ரயிலில் பயண சலுகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், திருமண நிதி உதவி, கல்வி உதவி தொகை, பராமரிப்பு உதவித்தொகை, சுய தொழில் புரிவதற்கான கடனுதவி, வேலையில் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாநில அளவிலான விருதுகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவருடைய வழிகாட்டலில் தமிழக அரசு வழங்கி வருகிறது. அதனடிப்படையில், இன்று 85 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,06,000- வீதம் மொத்தம் ரூ.90.10 இலட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. சமுதாய வளர்ச்சி என்பது ஒருசாரார் மட்டும் வளர்ச்சி அடைவதாக இருக்கக்கூடாது. சமச்சீரான ஒருங்கிணைந்த வளர்ச்சியாக இருக்க வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்திற்கு இது போன்ற தொடர்ச்சியான திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என தெரிவித்தார்.

Similar News