லாரி மோதி மின்கம்பம் முறிந்து விபத்து

விபத்து;

Update: 2025-04-11 02:56 GMT
கள்ளக்குறிச்சி அடுத்த பசுங்காயமங்கலம் ஏரியில் இருந்து லாரி ஒன்று மண் ஏற்றிக்கொண்டு நேற்று பகல் 1:00 மணிக்கு ஏமப்பேர், கரியப்பா நகர் நோக்கி சென்றது. விளாந்தாங்கல் சாலையில் சென்ற போது, எதிரே வந்த லாரிக்கு வழி விட முயன்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை லாரி இழந்தது. இதனால் சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது லாரி மோதியது. மின்கம்பம் முறிந்து விழுந்ததில் மின் ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து, விழுந்த இடத்தில் இருந்த புற்செடிகள் தீ பிடித்து எரிந்தன. மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அங்கு மின்கம்பத்தை மாற்றி அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். இதனால் அப்பகுதியில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Similar News