மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டுள்ள
131 வாகனங்கள் 15-ம் தேதி பொது ஏலம்;
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றவழக்குகளில் கைப்பற்றப்பட்டுள்ள 131 வாகனங்கள் வருகிற 15 -ம் தேதி பொது ஏலத்தில் விட்டு அரசுக்கு ஆதாயம் தேட பழைய வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வருகிற 14-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பொது ஏலத்தில் வாகனங்களை எடுக்க விரும்புவோர் நேரில் பார்வையிட்டு கொள்ளலாம். வருகிற 15 -ம் தேதி காலை 10 மணி முதல் வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படும். அன்றைய தினம் ஏலத்தில் வாகனங்களை எடுக்க வரும்போது, தங்களுடைய ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து, தங்களுடைய பெயர், முகவரியை காலை 8:00 மணி முதல் 9 மணிக்குள் பழைய வெளிப்பாளையம்காவல் நிலையத்தில் ஏலம் விடும் குழுவினரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். பொது ஏலத்தில் அதிக விலை கேட்கும் நபர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படும். மேலும், ஏலத்தில் எடுத்த வாகனங்களுக்கான தொகையை உடனடியாக செலுத்தி வாகனங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04365 247430 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.