தென்காசி அருகே கிளாங்காடு ஜமத்னீஸ்வரா் கோயிலில் தேரோட்டம்

கிளாங்காடு ஜமத்னீஸ்வரா் கோயிலில் தேரோட்டம்;

Update: 2025-04-11 07:53 GMT
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே கிளாங்காடு நல்லமங்கை அம்பாள் சமேத ஜமத்னீஸ்வரா் திருக்கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா, கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 9ஆம் தேதி வரை நாள்தோறும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை, வீதி உலா நடைபெற்றது. வியாழக்கிழமை காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து சுவாமி, அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் கோயில் கண்காணிப்பாளா் ஆனந்தன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பேச்சிமுத்து, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கிளாங்காடு மணி, கோயில் ஸ்ரீகாரியம் கோபாலகிருஷ்ணன், சுப்பிரமணியன், மாரியப்பன், அம்மையப்பன், குமாா், சிவசங்கரன், ஊராட்சி மன்றத் தலைவா் சந்திரசேகரன் உள்ளிடடோா் கலந்துகொண்டனா்.

Similar News