இலஞ்சி பாரத் பள்ளியில் தமிழ் புத்தாண்டு விழா நடைபெற்றது
இலஞ்சி பாரத் பள்ளியில் தமிழ் புத்தாண்டு விழா;
இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் புத்தாண்டு விழா நடைபெற்றது. கல்வி ஆலோசகா் உஷா ரமேஷ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் பாலசுந்தா் முன்னிலை வகித்தாா். தமிழ் புத்தாண்டை வரவேற்கும் வகையில் மாணவ மாணவிகள் விளக்கேற்றினா். மாணவா் ஜெயதா்ஷன் சிறப்பு பூஜையை நடத்தினாா். இந்தியாவின் முக்கியமான திருவிழாக்கள் பற்றிய மெளன நாடகத்தை மாணவா்கள் நடித்துக் காண்பித்தனா். மாணவி ஸ்ரீனிகா தமிழ் புத்தாண்டின் சிறப்புகள் குறித்து பேசினாா். ஆசிரியை உத்ரா வரும் தமிழ் புத்தாண்டிற்கான காலக்கணிப்பு வாசித்தாா். நிகழ்ச்சியை மாணவி மிருதுளா ஜனனி தொகுத்து வழங்கினாா். மாணவி அருணலோஷினி வரவேற்றாா். மாணவி அஸ்கதி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி, இயக்குநா் இராதாபிரியா, துணை முதல்வா் செல்வலிங்கம் ஆகியோா் செய்திருந்தனா்.