சிவகிரியில் மனுநீதி நாள் முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது
மனுநீதி நாள் முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது;
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சிவகிரி வட்டத்திற்குட்பட்ட இராமநாதபுரம் கிராமம் காமராஜர் மண்டபத்தில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் அவர்கள் முன்னிலையில், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் மற்றும் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதா அவர்கள் தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 63 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் இந்த மனுநீதி நாள் முகாமில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.