நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலில் பங்குனி புத்திர விழாவை முன்னிட்டு

பழனி ஆண்டவர், இடும்பன் ஆகியோருக்கு மகா அபிஷேகம் - தீபாராதனை;

Update: 2025-04-11 09:56 GMT
நாகை நீலாயதாட்சி அம்மன் உடனுறை காயாரோகண சாமி கோவிலில் உள்ள, பழனி ஆண்டவருக்கு பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முன்னதாக, பழனி ஆண்டவர், இடும்பன் ஆகியோருக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, பச்சரிசி, இளநீர், தேன், பால், தயிர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பட்டு சாற்றி, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News