சேலத்தில் கடன் தொல்லையால் விசைத்தறிக்கூட மேஸ்திரி தற்கொலை
போலீசார் விசாரணை;
சேலம் அம்மாப்பேட்டை பழனிசெட்டி தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 49), விசைத்தறிக்கூட மேஸ்திரி. இவருடைய மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சுந்தர்ராஜன் அடிக்கடி நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பணம் கொடுத்தவர்கள் அவரிடம் திருப்பி கேட்டு வந்தனர். மேலும் கடன் தொல்லை காரணமாக சுந்தர்ராஜன் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.