தேவகோட்டை அருகே மின் கம்பியில் சிக்கி மூவர் காயம்
தேவகோட்டை அருகே மின் கம்பியில் சிக்கி மூவர் காயமடைந்த நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்;

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்யா (35). இவர் தனது மகள் காவியா (13), உறவினரின் மகள் சாருமதி (17) ஆகியோருடன் சாத்திக்கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, வீடு திரும்பினார். அப்போது பொட்டல குடியிருப்பு அருகே வந்தபோது, மின்கம்பத்தில் மின் ஊழியர் ஒருவர் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அறுந்து விழுந்த மின்கம்பி இருசக்கர வாகனத்தில் சிக்கியது. இதில் சரண்யா, காவியா, சாருமதி ஆகிய மூவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். மின் ஊழியர் அஜாக்கிரதையால் இந்த விபத்து ஏற்பட்டதாக சரண்யா புகார் தெரிவித்தார். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்