சிங்கம்புணரி அருகே கோவிலில் திருட்டு

சிங்கம்புணரி அருகே கோவிலில் திருட்டு - போலீசார் விசாரணை;

Update: 2025-04-12 03:31 GMT
சிங்கம்புணரி அருகே கோவிலில் திருட்டு
  • whatsapp icon
சிங்கம்புணரி அருகே கிருங்காகோட்டை பொல்லாகுளம் மேற்கு கரையில் சடையாண்டி கோயில் உள்ளது. இக்கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து ரூபாய் நோட்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டு, சில்லறை காசுகளை சிதறவிட்டுச் சென்றனர். காலையில் உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த பக்தர்கள் போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து சிங்கம்புணரி போலீஸார் விசாரிக்கின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் உண்டியல் பணம் ரூ.50,000 வரை கிடைக்கும். ஆனால் 2 ஆண்டுகளாக பணத்தை எடுக்கவில்லை. இதனால் ரூ. 1 லட்சத்துக்கு மேல் திருடு போயிருக்கலாம் என மக்கள் தெரிவிக்கின்றனர்

Similar News