
புதுகை கோட்ட அஞ்சல் கண் காணிப்பாளர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:புதுக்கோட்டை தலைமை அஞ்சல் அலுவ லகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் 31 துணை அஞ்சலகங்களிலும் வரும் 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை சித்திரை திருவிழா மெகா ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் இந்த முகா மில் பங்கேற்று இலவசமாக ஆதார் பதிவு செய்ய லாம். அதே போல் பழைய ஆதார் அட்டையில் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண் திருத்தம் செய்ய ரூ. 50ம், பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100ம் கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் குறைந்த செலவில் வெளிநாட்டுக்கு பார்சல் அனுப்ப அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை அணுகலாம். பார்சல் பேக்கிங் செய்யும் வசதிகள் புதுக்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை வாடிக்கையாளர் கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விபரங் களுக்கு வணிக மேம்பாட்டு அலுவலர் நாகநாதனை 98655 46641 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.