மானாமதுரை அருகே தொட்டிலில் சிக்கி மாணவி பலி

மானாமதுரை அருகே தொட்டிலில் சிக்கி மாணவி உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;

Update: 2025-04-12 03:49 GMT
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம் மகள் ஹேமப்பிரியா (வயது14). இவர் ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் நிலையில் வீட்டில் உள்ள தொட்டிலில் ஆடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர் பாராதவிதமாக தொட்டில் கயிற்றில் கழுத்து சிக்கி இறுக்கியது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News