சிவகங்கையில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி துவக்கம்

சிவகங்கையில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி இன்று துவங்குகிறது;

Update: 2025-04-12 03:59 GMT
சிவகங்கையில் மாநில அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டி சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து சிவகங்கை யங் சேலஞ்ச் ஹாக்கி கழகச் செயலர் செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கை: மாநில ஹாக்கி வீரர் ராஜேஸ்வரன் நினைவாக 2-ஆம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் சிவகங்கை மாவட்ட திறந்தவெளி விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் கோவில்பட்டி, புதுக்கோட்டை, ராஜபாளையம், திருச்சி, நெய்வேலி, திருநெல்வேலி, தென்மண்டல காவல் துறை, காரைக்குடி சிவகங்கை உள்ளிட்ட அணிகள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டியில் முதல் 4 இடங்களை பெறும் அணிகளுக்கு முறையே ரூ 51,000, ரூ 31,000, ரூ.21,000, ரூ.11,000 ஆகிய ரொக்கப் பரிசுகளும், நினைவுக் கோப்பைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Similar News