கீழக்கொம்புக்காரனேந்தலில் பால்குட ஊர்வலம்
மானாமதுரை அருகே முருகன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது;
சிவகங்கை மாவட்டம், மானாமதுரைக்கு அருகிலுள்ள மூங்கில் ஊரணி கீழக்கொம்புக்காரனேந்தல் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத கந்தசாமி முருகன் கோவிலில், கடந்த 24ம் தேதி முதல் பங்குனி உத்திர விழா காப்புக் கட்டுதலுடன் விழா கோலாகலமாக தொடங்கியது. 8-வது ஆண்டாக நடத்தப்பட்ட இவ்விழாவின் இறுதி நாளில் ஏராளமான பக்தர்கள் பால்குடங்களை எடுத்து ஊர்வலமாக வந்தனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றன.