பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு துணை சபாநாயகர் பாராட்டு.
பணி நிறைவு பெறும் விஜயராஜ், பத்மாவதி மற்றும் இன்பபாவா ஆகிய ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வாழ்த்துரை வழங்கினார் உடன் பலர் கலந்து கொண்டனர்.;

திருவண்ணாமலை தனியார் மண்டபத்தில் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி துரிஞ்சாபுரம் வட்டாரம் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் இயக்க ஆண்டு விழா நிகழ்ச்சி மாநில துணைத்தலைவர் வேலன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முரளிதரன் வரவேற்புரை அளித்தார். மேலும் மாநில பொருளாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். பணி நிறைவு பெறும் விஜயராஜ், பத்மாவதி மற்றும் இன்பபாவா ஆகிய ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வாழ்த்துரை வழங்கினார் உடன் பலர் கலந்து கொண்டனர்.