குடிநீர் கேன் விற்பனை செய்து கொண்டே கஞ்சா விற்ற வட மாநில இளைஞர் கைது

குடிநீர் கேன் விற்பனை செய்து கொண்டே சிப்காட் தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்ற வட மாநில இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.;

Update: 2025-04-13 17:13 GMT
  • whatsapp icon
திரூவள்ளூரில் குடிநீர் கேன் விற்பனை செய்து கொண்டே சிப்காட் தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்ற வட மாநில இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வந்த ரகசிய தகவல் தகவலையடுத்து அங்கு திருவள்ளூர் தாலுக்கா காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது காக்களூர் தொழிற்பேட்டையில் டி.ஐ. தொழிற்சாலை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அக்ஷயா தாஸ் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் வைத்திருந்த பையில் சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இரண்டரை கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் இவர் காக்களூர் தொழிற்பேட்டை பகுதியில் குடிநீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. மாலை நேரத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து விட்டு வீட்டுக்கு செல்லும் தொழிலாளர்களிடம் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அக்க்ஷயா தாஸை திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News