சிவகிரி பகுதியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சிவகிரி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு;

தென்காசி மாவட்டம் வாசுதேவ நல்லூர், சிவகிரி, ராயகிரி பகுதிகளில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை ஆய்வு செய்த அவர் பணி களை விரைவாக செய்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயசந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா, சங்கரன் கோவில் கோட்டாட்சியர் கவிதா, வாசுதேவநல்லூர் வட்டாட்சியர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.