கீழப்பாவூரில் புதிய நூலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது
புதிய நூலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது;

தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் புதிதாக நூலக கட்டிடம் கட்ட தமிழ்நாடு அரசு ரூபாய் 22 லட்சம் ஒதுக்கீடு செய்தது. புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. காணொளி காட்சி மூலமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நூலக கட்டிடத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கீழப்பாவூர் பேரூராட்சி புதிய நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் பேரூராட்சி மன்றத் தலைவர் ராஜன் தலைமை தாங்கினார், கீழப்பாவூர் பேரூராட்சி செயலாளர் ஜா. மாணிக்கராஜ் முன்னிலை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இவ்விழாவில் கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜெயசித்ரா குத்தாலிங்கம், கனகபொன்சேகா முருகன், இசக்கிராஜ், அன்பழகு சின்னராஜா, ஜேஸ்மின் யோவான், விஜிராஜன், பவானி இலக்குமண உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.