ஸ்ரீசண்முகநாதா் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்.

சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.;

Update: 2025-04-12 14:45 GMT
ஸ்ரீசண்முகநாதா் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்.
  • whatsapp icon
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசண்முகநாதா் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பங்குனி உத்திரத்தையொட்டி இந்த திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி கோயில் வளாகத்தில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பக்தா்கள் ஊா்வலமாக சீா்வரிசை கொண்டு வந்தனா். இதைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோயில் அா்ச்சகா் காா்த்தி உள்ளிட்ட அா்ச்சகா்கள் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தினா். விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

Similar News