வல்லத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் பகுதியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வல்லம் சாகுல் ஹமீது பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்கள் திமுக தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை கண்டித்து இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் அநீதியை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத தில் முகமது அப்பாஸ் மௌலவி, இஸ்மாயில் உலவி ஜாகிர் உசேன், பீர் முஹமது, செல்லப்பா, அப்துல் அஜிஸ், அன்வர் பாதுஷா, காதர் சலீம், ஹபிபுல்லா, திவான் ஒலி, சையது வாத்தியார், பாபு மசூது, அப்பாக்குட்டி, நயினார் காலித், கனி உள்ளிட்ட ஏராளமானோர் மனோகர் கலந்து கொண்டனர்.