கரிவலம்வந்தநல்லூரில் இன்று மாலை திருத்தேரோட்டம்
பால்வண்ணநாத சுவாமி கோவிலில் இன்று மாலை திருத்தேரோட்டம்;

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் கரிவலம் வந்த நல்லூர் அமைந்துள்ள பால் வண்ண நாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று மாலை 4 மணியளவில் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் இன்று காலையில் பால்வண்ணாத சுவாமி மற்றும் ஒப்பனை அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேககளும் அலங்காரங்களும் தீபாரதம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மாலையில் தேரோட்டம் நிகழ்ச்சியில் தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா. தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதம் திருமலை குமார் உள்ளிட்ட ஏராளமானூர் பங்கேற்கின்றனர்.